திரிஷா கூட அது பண்ணியே ஆகணும்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த அரசியல்வாதி!! உண்மை உடைத்த இயக்குனர்
நடிகை திரிஷாவின் விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
அதிமுக முன்னாள் நிர்வாகி தன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பதாக திரிஷா தற்போது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தி ரோடு படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் திரிஷா விவரம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் மதுரைக்கு ஷூட்டிங்காக சென்று இருந்தோம். அந்த சமயத்தில் கவுன்சிலர் ஒருவர் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.
ஆனால் அதற்கு திரிஷா கண்கொள்ளாமல் இருந்தார். நான் உடனே மேடம் அவர்கள் வெயிட் செய்கிறார்கள் என்று கூறினேன். அதுக்கு திரிஷா, அரசியல்வாதியோடு போட்டோ எடுத்தால் அதை அவர்கள் மிஸ் யூஸ் செய்துவிடுவார்கள் வேண்டவே வேண்டாம்" என்றார்.
இப்ப்டிப்பட்டவரா அந்த அதிமுக முன்னாள் நிர்வாகி சொன்னது போல் நடந்திருப்பார்?..அந்த நபர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிஷாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.