இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!! 3 நாளாக தொடரும் சிகிச்சை...

Chennai Bharathiraja Tamil Directors
By Edward Dec 28, 2025 06:30 AM GMT
Report

பாரதிராஜா

16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டூடியோவில் செட் போட்டு படம் எடுத்து வந்த காலத்தில், இயற்கையோடு இயற்கையாக இணைந்து தமிழ் திரையுலகிற்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!! 3 நாளாக தொடரும் சிகிச்சை... | Director Bharathiraja Admitted To A Hospital

இப்படத்தினை தொடர்ந்து பல கலைஞர்களை தன் படத்தில் அறிமுகப்படுத்தி டாப் இடத்திற்கு கொண்டு வந்தார். சமீபகாலமாக வயது மூப்பு காரணமாக நடிப்பில் இருந்தும் இயக்குவதில் இருந்தும் விலகியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் தான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்தார்.

மருத்துவமனை

இந்நிலையில், பாரதிராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!! 3 நாளாக தொடரும் சிகிச்சை... | Director Bharathiraja Admitted To A Hospital

கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாகவும் பாரதிராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.