சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை! சர்ச்சைக்கு புற்றுப்புள்ளி வைத்தநடிகர் அருண் விஜய்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின் முன்னணி தொகுப்பாளராக பணியாற்றி 3 படத்தின் மூலம் தனுஷுக்கு தோழனாக நடித்து அறிமுகமாகியவர் சிவகார்த்திகேயன்.
சமீபத்தில் அவரது நடிப்பில் டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூல் ரீதியாக 100 கோடியை தாண்டியும் வசூல் வேட்டையை பெற்று வருகிறது.
இவர் நடிப்பில் அயலான், எஸ்கே20 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் அருண் விஜய்க்கும் இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
ஒரு நிகழ்ச்சியின் போது, நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள் என்ற பதிவினை போட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பொங்கி இணையத்தில் விமர்சித்தும் வந்தனர்.
இதனையடுத்து, அருண் விஜய் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க சிவகார்த்திகேயன் அருண் விஜய் மகன் ஆர்னவ் பிறந்தாளுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
இதனை அடுத்து அருண் விஜய் யானை படத்தின் பிரஸ் மீட் சம்யத்தில் சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அருண் விஜய், அப்படியொன்றும் இல்லை. நாங்கள் சக நடிகர்கள் தான். நீங்கள் தான் அதை பரப்பி விட்டது என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.