கொஞ்சம் ஓரம் போங்க சார்! பிரபல நடிகரை அசிங்கப்படுத்திய பவுன்சர்ஸ்?

sivakarthikeyan சிவகார்த்திகேயன் anbusezhiyan arunviijay
By Edward Feb 24, 2022 06:25 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதையடுத்து காமெடியனாக தனுஷின் 3 படத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார். போகபோக அவரது மார்க்கெட் எகிற தனுஷ் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக 100 கோடி வசூல் கொடுத்து 35 கோடியில் அளவில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பைனான்சியர் அன்பு செழியன் மகள் திருமணம் நடைபெற்றது. முக்கிய நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து கூறி வந்தனர். நடிகர் சிவகார்த்திகேயனும் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றுள்ளார். அந்தவரிசையில் அருண்விஜய் அதற்கு முன் வாழ்த்து கூறிவிட்டு செல்லும் போது, சிவகார்த்திகேயன் நுழைந்துள்ளார்.

சிவகார்த்திகேயனை விட அருண் விஜய்க்கு அந்த இடத்தில் மரியாதை குறைவாக இருந்தது தான் ஆச்சரியமே. சிவகார்த்திகேயன் வரும்போது ஏகப்பட்ட கூட்டம் கூடியதால் அங்கிருந்து அவரை பத்திரமாக மீட்டு செல்ல பவுன்சர் போராடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் அருண்விஜய் உள்ளே வர, சிவகார்த்திகேயன் வருகிறார் தள்ளி நில்லுங்கள் எனக்கூறி அவரை ஓரங்கட்டி நிற்க வைத்து விட்டனர்.

இதை கண்டுக்கொள்ளாமல் அருண்விஜய் அங்கிருந்து சென்றுவிட்டார். இதேபோல், கடந்த ஆண்டு அருண்விஜய் டிவிட்டர் பக்கத்தில் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்த்தை இல்லாம போச்சு என்று கருத்து தெரிவித்திருந்தார். இதை சிவகார்த்திகேயனை தான் சொல்லியிருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள், அருண்விஜயை விமர்சித்து வந்துள்ளனர்.