அந்த படமே காப்பி தான்!! பிரபல நடிகை முன் அட்லீயை கலாய்த்து தள்ளிய ஆர்யா..
தமிழ்சினிமாவில் இயக்குனர் சங்கருடன் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராகியவர் இயக்குனர் அட்லீ. முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்ததை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று பிளாக் பஸ்டர் படத்தினை கொடுத்தார்.
இதனைதொடர்ந்து வாய்ப்புகள் வராததால் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தினை இயக்கி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருந்த நிலையில், படத்தில் பிரிவ்யூ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
சிலர் ஜவான் படம், சில படத்தின் காட்சியை வைத்து காப்பி அடித்துள்ளதாகவும் கலாய்த்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஆர்யா, ராஜா ராணி படத்தின் போது அனுஷ்காவுடன் ஒரு பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அட்லீக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டுள்ளார்.
அந்த பேட்டியில், பல வருஷமா காப்பி அடுத்து தான் படம் எடுக்குறல, என்று ஆர்யா கேட்டுள்ளார். அதற்கு அட்லீயும், ஆமாம் ஒரு சீன் நான் எடுத்த மாதிரி இருக்குன்னு சொன்னாங்க அத எந்த சீன்னு பார்க்குறேன் என்று சொல்லியுள்ளார்.
மேலும், Dhoop படத்தினை பார்த்திட்டு இருக்கன்னு சொல்ல, டூப்ல இருந்து எதுவும் தூக்கல என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆர்யா, Dhoopல இருந்து எந்த சீன தூக்குற, ராஜா ராணி படமே நம்ம திருடி தான் படம் எடுத்தோம், அடுத்த படமும் நம்ம திருடிதான் எடுக்க போறோம்ன்னு கலாய்த்து பேசியிருக்கிறார் ஆர்யா.
அதற்கு அட்லீ ஆமான்னு எதுவும் தெரியாதது போல் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Still funny. ??? pic.twitter.com/RvGXFQRHTI
— No Name (@bldgcontractor) July 10, 2023