நயன்தாரா தான் வேண்டும்!! இயக்குனரிடம் அடம்பிடித்து காரியத்தை சாதித்த பிளேபாய் நடிகர்..

Arya Nayanthara Gossip Today
By Edward Aug 09, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஆர்யா, சந்தானம், நயன் தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2010ல் வெளியானது. பல காமெடி காட்சிகள் இன்றுவரை மக்கள் ரசிக்கும் படி சந்தானம் - ஆர்யா காம்பினேஷன் இருந்தது.

நயன்தாரா தான் வேண்டும்!! இயக்குனரிடம் அடம்பிடித்து காரியத்தை சாதித்த பிளேபாய் நடிகர்.. | Arya Only Recommended Romance With Nayanthara

அப்படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் பேட்டியொன்றில் ஹீரோயினாக நயன் தாராவை தான் போட வேண்டும் என்று ஆர்யா பல விசயங்களை செய்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

படத்தின் கதையை கேட்டதும் பிடித்து போன ஆர்யா ஹீரோயினாக யாரை போடலாம் என்ற ஆலோசனையின் போது நயன் தாரவை போடலாம் என்று கூறினார். அந்த சமயத்தில் நடிகை நயன் தாரா வாழ்க்கையை வெறுத்துப்போய் சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்ற முடிவில் இருந்திருந்தார்.

படங்களில் நடிக்காமல் இருக்கும் நயன் தாராவிடம் எப்படி கேட்பது என்று யோசித்திருந்த போது ஆர்யா தான் நயனுக்கு கால் செய்து பேசினார். நயன் தாராவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று பல விசயங்களை செய்தார் ஆர்யா.

அப்படத்திற்கு பின் தான் நயன் தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்தும் அதன்பின் 2013ல் ஆர்யாவுடன் ராஜா ராணி படத்திலும் இணைந்திருக்கிறார்கள் என்றும் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.