பப்பில் நடுவிரலை காட்டி அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான் மகன் ஆர்யன்கான்!! போலிஸுக்கு பறந்த புகார்..
ஆர்யன் கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், The Ba***ds of Bollywood என்ற வெப் தொடரை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். இதனை தொடர்ந்து ஆர்யன் கான் பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் பிரபலமானார்.

இந்நிலையில் ஆர்யன் கான் மீது வழக்கறிஞர் ஒருவர் எஃப் ஐ ஆர் பதிவு செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி பெங்களூரு பப்பில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியின்போது கூட்டத்தை நோக்கி ஆர்யன் கான் நடுவிரலை காட்டி ஆபாசமான செயலில் ஈடுபட்டதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
எரிச்சலூட்டும் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் ஆபாசமான சைகையை செய்ததற்காக, பொது ஒழுங்கீனம் அல்லது பீதியை ஏற்படுத்தக்கூடிய நடத்தை போன்ற காரணங்களை அந்த புகாரில் வழக்கறிஞர் ஓவைஸ் ஹுசைன் என்பவர் அளித்துள்ளார்.

மத்திய பிரிவின் துணை காவக்ல் ஆணையர், ஹகே அக்ஷய் மச்சிந்தரா, சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில், அவர்கள் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கி, பப் பளாகத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்ததாக தெரிவித்தார். இந்த வழக்கை பாரதிய நியாய சன்ஹிதாவின் 173 பி பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.