என்னது மலர் டீச்சரா நடிக்கவிருந்தது சாய் பல்லவி இல்லையா!! உண்மையை கூறிய இயக்குனர்

Asin Sai Pallavi
By Karthick Raja Jul 11, 2024 03:30 PM GMT
Report

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் பிரேமம். இப்படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் அது நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்த மலர் டீச்சர் தான்.

மலர் டீச்சர் மற்றும் நிவின் பாலி இடையே உள்ள காதல் காட்சிகள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

என்னது மலர் டீச்சரா நடிக்கவிருந்தது சாய் பல்லவி இல்லையா!! உண்மையை கூறிய இயக்குனர் | Asin Is First Choice For Premam Movie

இந்த நிலையில், இந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சாய் பல்லவி கிடையாதாம். பிரபல நடிகை அசின் தான் இப்படத்தில் முதன் முதலில் மலர் டீச்சராக நடிப்பதாக இருந்தாராம்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் "பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரியை சேர்ந்தவராக முதலில் எழுதினேன். அதற்காக முதலில் இப்படத்தில் அசினை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். ஆனால், மலர் கதாபாத்திரம் தமிழாக மாறியபின் சாய் பல்லவியை நடிக்க வைத்தோம்" என கூறியுள்ளார்.