சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை

Jayam Ravi Suriya Asin Jyothika Tamil Cinema
By Dhiviyarajan Oct 26, 2023 01:00 PM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை அசின், ஜெயம் ரவி நடிப்பில் 2004 -ம் ஆண்டு வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் கமல், அஜித், விஜய் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

சூர்யாவுடன் சேர நினைத்த அசின், முட்டுக்கட்டையாக இருந்த ஜோதிகா..சோகத்தில் வாடிய நடிகை | Asin Missed Super Hit Movie Chance

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, அசின் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சூர்யா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் பூமிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது அசின் தான். ஆனால் தன்னை விட ஜோதிகா கதாபாத்திரம் நன்றாக இருப்பதால் அசின் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடைசியில் படம் வெளிவந்த பிறகு அசின் இந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று எண்ணி வருத்தப்பட்டதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.