லட்சத்தில் புறளும் மணிமேகலை!! விஜே பிரியங்கா மொத்த சொத்து இவ்வளவா கோடியா?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி சின்னத்திரை வெள்ளித்திரை என நல்ல ஒரு இடத்தினை பிடித்து காசு சம்பாதிக்கும் பிரபலங்கள் பலர் கொடிக்கட்டி பறக்கிறார்கள். அதில் தற்போதைய சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்களை சொல்லலாம்.
ஆனால் விஜேவாகவும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களாகவும் இருந்து எபிசோட்டிற்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள் பிரபல தொலைக்காட்சி சேனலை சார்ந்த பிரபலங்கள். அப்படி சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பிரியங்கா.
பிக்பாஸ், சூப்பர் சிங்கர் என்று சமீபத்தில் கலந்து கொண்டு தன்னுடைய மார்க்கெட்டையே உயர்த்தி இருக்கிறார். அதேபோல் மணிமேகலையும் விஜேவாக ஆரம்பித்து பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் டாப் இடத்தினை பிடித்தார்.
இந்நிலையில் பிரியங்கா மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியில் லட்சத்தில் சம்பளம் வாங்கினாலும் தினமும் தான் செய்யும் செயல்களை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் பதிவிட்டு சம்பாதித்து காசு பார்த்து வருகிறார்கள்.
அப்படி மணிமேகலை தொடர்ந்து வீடூ, கார், விலையுயர்ந்த பை என வாங்கி மிரளவைத்து வருகிறார். பிரியங்காவும் தன் பங்கிற்கு யூடியூப், விளம்பரங்கள் என்றும் சம்பாதித்து வருகிறார்கள்.
தற்போது பிரியங்காவின் மொத்த சொத்து சுமார் 9 கோடி அளவில் இருக்கும் என்றும் மணிமேகலையின் சொத்து மதிப்பு 5 அல்லது 35 கோடி வரை இருக்கும் என்று கணிப்பாக கூறி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சொத்து மதிப்புகள் உண்மையிலேயே இத்தனை கோடிகளா இல்லை வதந்தியா என தெரியவில்லை.