விஜய் பிள்ளைகள் வந்து சொன்னாங்களா? சங்கீதா விவாகரத்தில் பிரபல ஜோதிடம் ஓபன் டாக்..

Vijay Astrology Sangeetha Vijay
By Jai Apr 22, 2026 06:45 AM GMT
Report

சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த விஜய், அன்றில் இருந்து பல சவால்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள். அரசியல் ஒரு பக்கம் இருக்க, மனைவி சங்கீதாவுக்கும் அவருக்கும் இடையேயான பிரச்சனைகள் சில வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது.

விஜய் பிள்ளைகள் வந்து சொன்னாங்களா? சங்கீதா விவாகரத்தில் பிரபல ஜோதிடம் ஓபன் டாக்.. | Astrologer Shelvi About Vijay Sangeetha Divorce

ஜோதிடர் ஷெல்வி

இந்த பிரச்ச்னைக்கு விஜய்யின் நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஷெல்வி அளித்த பேட்டியொன்றில் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் பிள்ளைகள் வந்து சொன்னாங்களா? சங்கீதா விவாகரத்தில் பிரபல ஜோதிடம் ஓபன் டாக்.. | Astrologer Shelvi About Vijay Sangeetha Divorce

விஜய் பிள்ளைகள் 

அதில், விஜய்யுடன் எனக்கு ஓரளவு பழக்கம், அவருக்கு நெருக்கமான நண்பர்கள் எனக்கு நல்ல க்ளோஸ். அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். 8 வருடங்கள் விவாகரத்து வழக்கை நடத்திவிட்டு பிள்ளைகளுக்காக சேர்ந்துவிடுவோம் என்று சொல்லி சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

திருமணமான அன்றே விவாகரத்து ஆனவர்களும் இருக்கிறார்கள். எனவே இவர்களும் அப்படி சேரலாம். ஏன் நடக்கக்கூடாது. விஜய் அவரது குடும்பத்தை பார்த்துக் கொள்ளவில்லை என்று எப்படி தெரியும்.

அவர் பார்த்துக் கொள்ளாமலா பிள்ளைகள் வந்தார்கள். இல்லை பிள்ளைகள் வந்து விஜய்யை குறை சொன்னார்களா? அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.