அக்காவை கொன்னுட்டு அடிச்சு தொரத்திட்டாங்க!! சில்க் ஸ்மிதா தம்பி உடைத்த உண்மை..
சில்க் ஸ்மிதா
80, 90களில் கிளாமர் குயினாக திகழ்ந்து கோடிக்கணக்கார ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதா பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வருவதுண்டு. பெரும்பாலும் சில்க் ஸ்மிதா மறைவுக்கும் பின் அவருடைய குடும்பம் என்னவானது என்று யாரும் யோசித்திருக்கமாட்டார்கள். தற்போது சில்க் ஸ்மிதாவின் தம்பி ஒரு பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார்.
தம்பி உடைத்த உண்மை
அதில், என்னுடைய அக்காவின் மரணத்திற்கு அவருடைய பிஏ ராதாகிருஷ்ணன் தான் காரணம் என்றும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை, ராதாகிருஷ்ணன் தான் அவரை கொலை செய்துவிட்டதாக சர்ச்சையாக பேசியுள்ளார். சில்கின் மரணத்தின் போது 20 நாட்கள் அவருடைய குடும்பத்தினர் அந்த வீட்டில் தான் தங்கியிருந்தோம்.
ராதாகிருஷ்ணனுக்கு தமிழ் சினிமாவில் அதிக ஆட்கள் பல இருந்ததால் சில்கின் சொத்துக்களை சுருட்ட தான் குடும்பம் இந்த வீட்டில் இருப்பதை கட்டுக்கதை கட்டி இருக்கிறார்க. இதை நம்பி தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் சில்க்கின் வீட்டிற்கு வந்து அவர் குடும்பத்தை அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
மொழித் தெரியாமல் எந்தவொரு ஆள் பலமும் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாகவும் இப்போது ராதா கிருஷ்ணன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் கூட அவர் மீது வழக்கு தொடுப்போம் என்றும் அவருடைய தம்பி தெரிவித்திருக்கிறார்.
சில்க் ஸ்மிதா சேர்த்த சொத்துக்கள், அவருடைய வீடு அத்தனையும் ராதாகிருஷ்ணன், தன் பொறுப்பில் கொண்டு வந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார் சில்க் ஸ்மிதா தம்பி.