ஷாக் கொடுத்த அட்லீ! கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்த அல்லு அர்ஜுன்! இதான் காரணம்?
இயக்குனர் சங்கரிடன் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ஆர்யா, நயன் தாராவை வைத்து ராஜா ராணி படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் அட்லீ. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
இதன்பின் வாய்ப்புகள் யாரும் கொடுக்காத நிலையில் பாலிவுட் பக்கம் சென்று நடிகர் ஷாருக்கானை இயக்க திட்டமிட்டார். அதுவும் சரிவர மும்பையில் ஷாருக்கான் படத்திற்கான வேலைகளை பார்த்து வந்தார். தற்போது லயன் என்ற பெயரில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தனக்கு கதை கூறும்படி அழைத்து பேசியுள்ளார். கதை கூறுகிறேன், எனக்கு 35 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு சற்றும் யோசிக்காத அல்லு அர்ஜுன் இதற்கு வாய்ப்பே இல்லை என்று கையெடுத்து கும்பிடும் அளவிற்கு வழியணிப்பி வைத்திருக்கிறாராம். தற்போது டோலிவுட்டில் அட்லீயின் நியூஸ் தான் டாப் டாப்பிக்காக இருக்கிறது.