நயன்தாரா ஷூட்டிங் போன நேரம்!! லீக்காகிய அட்லீ - ஷாருக்கானின் ஜவான் படத்தின் சண்டை காட்சி!!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கருடன் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லீ. முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அட்லீ, விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார்.
அதன்பின் முன்னணி நடிகர்கள் படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த அட்லீ கொரோனா லாக்டவுனுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்க கமிட்டாகினார்.

படத்தின் ஷூட்டிங் இடையில் பலமுறை நின்று போனதால் படத்தின் வேலைகள் சரியாக முடிக்காமல் போனது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பினை முடிக்கும் நிலையில், நயன் தாரா ராஜஸ்தானுக்கு சென்றார்.
இந்நிலையில் ஜவான் படத்தின் ஷாருக்கான் சண்டை போடும் சில நொடிகள் கொண்ட காட்சி இணையத்தில் லீக்காகி டிரெண்ட்டாகி வருகிறது.
மிரட்டும் சண்டை காட்சியை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்காகியும் வீடியோவை பகிர வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். படத்தின் காட்சி எப்படி லீக்கானது என்று ஷாருக்கான் ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
As a responsible SRKian, you shouldn't spread or share any leaked content from the sets of #ShahRukhKhan's upcoming movie #Jawan.
— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc) March 10, 2023
Urging all fans to stay away from such leaked content and wait for official release. pic.twitter.com/skJCM9sbBa

