தளபதியை ஏமாந்தது தான் மிச்சம்! பிரபல இயக்குநரால் விஜய்யுடன் முரண்டு பிடிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம்?
தமிழ் சினிமாவில் 1984ல் நாளையத்தீர்ப்பு படத்தில் ஆரம்பித்து மாஸ்டர் படம் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் நடிகர் விஜய். தென்னிந்திய சினிமாவின் தளபதி என அழைக்கபடும் இவர் படத்தில் நடிக்கவும் இயக்கவும் பலர் வரிசையில் நிற்பார்கள்.
அந்த அளவிற்கு இவரின் மார்க்கெட் வசூலையும், விமர்சனத்தையும் கொட்டித்தீற்கும். இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதியின் 66 படத்தின் கேல்ஹுட் விவகாரம் தான் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இயக்குநர்கள் தேர்வு செய்வதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருக்க, விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யிடம் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறதாம்.
தளபதி 66 படத்தின் கால்சீட் கேட்டு தினமும் விஜய்யை தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்த பிகில் படம் அட்லீயின் கவனக்குறைவால் படம் 180 கோடியை தாண்டியது. அதனைத் தொடர்ந்து பிகில் படம் 300 கோடி வசூல் செய்தாலும் சில கோடிகள் மட்டுமே தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யை வைத்து சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக விஜய்யிடம் தொடர்ந்து தளபதி 66 படத்தின் கால்சீட் கேட்டு வருகிறார்களாம்.
தற்போது விஜய் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறாராம். ஏஜிஎஸ் மட்டுமில்லாமல் ஏற்கனவே விஜய் அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனமும் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.