பாலிவுட் சென்றது இப்படியா!! இயக்குனர் அட்லீயின் மனைவியின் புது தொழில்..
Atlee Kumar
Jawan
Actress
By Jai
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பயணித்து, பின் ராஜா ராணி என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அட்லீ குமார்.
இப்படத்தினை தொடர்ந்து, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை விஜய்யை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். பின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கி ஜவான் என்ற 1000 கோடி வசூல் படத்தை கொடுத்தார்.
புது தொழில்

தற்போது மனைவி பிரியாவுடன் மும்பையில் செட்டிலாகி அட்லீக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அட்லீயின் மனைவி பிரியா தற்போது புதிய பிசினஸ் ஆரம்பிக்கவுள்ளார் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஃபேஷன் தொடர்பான புதிய தொழிலை தான் பிரியா துவங்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதன் வெப் சைட் லான்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று பிரியா தெரிவித்துள்ளார்.