மூணு மாசம் கூட தாங்காதுன்னு சொன்னாங்க!! கணவர் மீது காதலில் ஊரிப்போன நடிகை மகாலட்சுமி..
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். மகனுடன் வாழ்ந்து வந்த மகாலட்சுமி இடையில் சீரியல் நடிகை ஈஸ்வருடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார்.
ஈஸ்வரின் மனைவி பிரச்சனை செய்ததால் அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் மகாலட்சுமி. அதன்பின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை இரு ஆண்டுகளாக ரகசிய காதலில் இருந்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
யாரும் எதிர்பார்க்காத மகாலட்சுமி - ரவீந்தர் திருமணம் பெரியளவில் பேசப்பட்டது. விமர்சனங்களை காதில் போடாமல் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது திருமணமாகி ஒரு ஆண்டை கழித்திருக்கும் மகாலட்சுமி தன் கணவருடன் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். ரவீந்தரும் மனைவியை புகழ்ந்து பேசி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
மூணு மாசமே தாங்காதுன்னு கலாய்த்தார்கள், ரெண்டு பேரும் இப்படி உருகி காதலிக்கிறார்களே என்று வாழ்த்து கூறி கருத்துக்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.