இமான் பிரச்சனையால் கோடிக்கணக்கில் நஷ்டம்!! தலையில் துண்டை போட்ட சிவகார்த்திகேயன்..
முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான படம் அயலான். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் மிகப்பெரிய நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுத்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்
அயலான் படத்தின் மொத்த பட்ஜெட்டில், தயாரிப்பு செலவு மட்டும் 90 கோடி. பப்ளிசிட்டி-க்கு 4 கோடி, விநியோகம் செய்ய 1.5 கோடி, வாங்கி கடனின் வட்டி 75 கோடி என்று மொத்த பட்ஜெட் 170.5 கோடி. 2016 ஆரம்பிக்கப்பட்ட அயலான் படத்திற்கான 90 கோடி பட்ஜெட்டிற்கான ஒரு மாத வட்டியே 2.75 கோடி. வருடத்திற்கு 32.40 கோடியாக இருக்கிறது. அயலான் படம் ரிலீஸ் செயவதற்கு முன் பேச்சுவார்த்தைக்கு பின், சிவகார்த்திகேயன் 35 கோடியை பைனான்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.
சம்பளம்
இப்படத்திற்காக 5 கோடி மட்டுமே சம்பளமாக சிவகார்த்திகேயன் வாங்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமானுக்கு 2.5 கோடி, ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவுக்கு 2 கோடியும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் 1 கோடி, இயக்குனர் ரவிக்குமார் 50 லட்சம், மற்ற கலைஞர்கள் 4 கோடி என சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டர் & சாட்லைட் ரைட்ஸ்
தமிழ்நாட்டில் மட்டும் தியேட்டர் ரைட்ஸ் மட்டும் 34.33 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விநியோகஸ்தர்களுக்கும் ஏரிய வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 75 லட்சத்திற்கும் , கர்நாடகாவில் 3 கோடிக்கும், ஆந்திரா- தெலுங்கானாவில் 2 கோடிக்கு விற்கப்பட்டாலும் படம் ரிலீஸ் ஆகவில்லை. ஓவர்சீஸ் ஏரியாவிற்கு 12 கோடிக்கும் இந்தி டப்பிங்கிற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மற்றும் சாட்லைட் உரிமையை சன் நிறுவனம் 20 கோடிக்கும் ஆடியோ ரைட்ஸ் 2 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது. இன்றைக்கு சாட்லைட் ரைட்ஸ் மதிப்பு 40 கோடியாக இருந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படத்திற்கு இவ்வளவு தான் கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிபாளர்
95 பட்ஜெட் எடுத்து கொடுத்த அயலான் படத்தின் பிசினஸ் 86.75 கோடியாக இருக்க தயாரிபாளருக்கு 8.75 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. தமிழில் மட்டும் சாட்டிலைட் விற்கப்பட்டுள்ளதால், மற்ற மொழிகளில் விற்றால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அயலான் படம் மொத்தம் 55 கோடியில் தயாரிப்பாளருக்கு கிடைத்த ஷேர் மட்டும் 26 கோடி கிடைத்திருக்கிறது.

விநியோகஸ்தர்கள்
தமிழ் நாட்டில் மட்டும் விநியோகஸ்தருக்கு 34.33 கோடி விற்கப்பட்டுள்ள நிலையில் 26 கோடி மட்டுமே தான் ஷேர் கிடைத்துள்ளது. இது 8.33 கோடி நஷ்டத்தை விநியோகஸ்தர்களுக்கு கிடைத்துள்ளது. கேரளவில் 72.66 லட்சம் வசூல் பெற்று 33.95 லட்சம் மட்டுமே தான் ஷேர் கிடைத்துள்ளது. அப்படி கேரளா விநியோகஸ்தர்களுக்கு 66 லட்சம் நஷ்டத்தை கொடுத்துள்ளதாம். உலகளவில் அயலான் படம் வெற்றிப்பெறாத படமாக இருந்து சிவகார்த்திகேயனின் தோல்வி படமாக மாறியிருக்கிறது என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
படத்தின் கடன் தொகையை சிவகார்த்திகேயன் மட்டுமே கட்டியதால் அவருக்கு தான் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் இமான் விசயத்தில் வாங்கிய கெட்ட பெயர் தான் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.