வர்மாவின் பிடியிலிருந்து தப்பிய சிவா.. அயலிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Tamil TV Serials
By Tony Sep 30, 2026 03:23 AM GMT
Report

அயலிக்கு காத்திருந்த அதிர்ச்சி

 தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவாவை வர்மா கடத்தி அயலியை நேரில் வர சொல்லி மிரட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது அங்கே குடோனுக்குள் அடைக்கப்பட்ட சிவா ரவுடிகளை அடித்து போட்டு சண்டையிட்டு அங்கிருந்து தப்பிக்கிறான். மறுபக்கம் வர்மா அயலியை மிரட்டியபடி இருக்க சிவா கோவிலுக்கு வந்து எனக்கு ஒன்னும் இல்லை என்று அயலியை சந்திக்கிறான். மேலும் சிவா அம்முவை கடத்திட்டாங்க அவளை காப்பாற்றுவதற்காக தான் நான் அங்கு போனேன் என்று சொல்கிறான்.

வர்மாவின் பிடியிலிருந்து தப்பிய சிவா.. அயலிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Ayali Serial Today Review

அப்போ ஜான் எங்கே என்ற கேள்வியும் அயலி மனதில் எழுத அவனையும் காப்பாற்ற வேண்டும் என யோசிக்கின்றனர். ஏற்கனவே பைரவியை இழந்துவிட்டோம் ஜானகியை இழந்திடக் கூடாது. எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.