அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விவகாரம்!! விசாரணைக்கு பின் பயில்வான் சொன்ன வார்த்தை...
Bayilvan Ranganathan under three sections over alleged defamatory remarks about actor Arjun’s daughter.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விவகாரம்
நடிகர் அர்ஜுன் நவம்பர் 19 ஆம் தேதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மகள் ஐஸ்வர்யாவை படுமோசமான விமர்சித்தும், மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று கொச்சையாக பேசப்பட்டதை எதிர்த்து தன்னுடைய கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டு எச்சரித்தார்.
இதற்கு முக்கிய காரணமாக இருந்தது பயில்வான் சமீபத்திய வீடியோவில் பேசியதுதான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலிசார் வீசாரித்துள்ளனர்.
விசாரணை முடிந்து பயில்வான் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய விளக்கத்தை சுருக்கமாக கூறியிருக்கிறார். ஆனால் போலிசார் என்ன என்ன கேள்விகள் கேட்டார்கள்? என்றும் விசாரணையில் வேறென்ன தகவல் என்பது குறித்து எதையும் பேசவில்லை.
அப்படி செய்தியாளர் அவரிடம், போலிசார் உங்ககிட்ட என்ன கேட்டாங்க என்றதற்கு, என்குயரி என்றால் எதுவும் வெளியில் சொல்ல முடியாது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன் என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார்களா? என்ற கேள்வி, அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று அங்கிருந்து பயில்வான் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்கு முன் பயில்வானிடம், ஆதரமற்ற குற்றச்சாட்டு நீங்கள் வைத்துள்ளீர்கள் என்று கூறப்படுகிறது.
உங்களிடம் ஐஸ்வர்யா பற்றி ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்வி, புகாரே ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பது போலத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார் பயில்வான்.
🚨 Police have booked YouTuber and Actor Bayilvan Ranganathan under three sections over alleged defamatory remarks about actor Arjun’s daughter. https://t.co/AVa93TqzrI
— Vaagai News (@vaagaimedia) November 23, 2026