மணமேடையில் உட்கார்ந்து தாலிகட்ட மறுத்துள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்
Tamil TV Serials
By Yathrika
அரவிந்த்
அய்யனார் துணை சீரியலில் சோழனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை வென்றவர் நடிகர் அரவிந்த்.
இவர் தன்னுடைய ஒரு பிராஜக்டில் நடித்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் ஒரு விருது விழாவில் மணமேடையில் உட்கார்ந்துகொண்டு அரவிந்த் தாலிகட்ட மறுத்த விஷயத்தை கூறியுள்ளார்.

அரவிந்த் அம்மா-அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்கள். அவர்கள் நினைவாக ஒரு புகைப்படம் ஏற்பாடு செய்ய அது திருமண நேரத்தில் வரவில்லை.
அம்மா-அப்பா புகைப்படம் வந்தவுடன் தாலி கட்டுகிறேன் என அரவிந்த் முடிவு எடுக்க பின் எப்படியோ புகைப்படம் வர திருமணமும் நடந்து முடிந்துள்ளதாம்.
திருமண மேடையில் நடந்த ஒரு விஷயத்தை இப்போது பகிர்ந்துள்ளார் சங்கீதா.