அய்யனார் துணை நடிகை மதுமிதாவா இது!! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்காங்க பாருங்க..
மதுமிதா
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை மதுமிதா. இந்த சீரியலுக்கு பின் எதிர்நீச்சல் தொடர்கிறது தொடரில் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அவருக்கு பதில் விஜே பார்வதி நடித்து வருகிறார்.

இதனையடுத்து விஜய் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் நிலா ரோலில் நடித்து வருகிறார். டிஆர்பியில் சக்கைபோடு போட்டு வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் நிலா ரோலில் நடித்து வரும் மதுமிதாவிற்கு அளவுக்கடந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. பெங்களூருவை சேர்ந்த மதுமிதா, கன்னட சீரியல்களில் நடித்து பின் தெலுங்கு, தமிழ் பக்கம் திரும்பி நடித்து வருகிறார்.

தற்போது மதுமிதா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
புகைப்படங்கள்


