இனிமேல் நான் கோபி கிடையாது!! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி கண்கலங்கிய நடிகர் சதீஷ்
Star Vijay
Serials
Baakiyalakshmi
Tamil TV Serials
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் பாக்யா வீட்டிற்கு சென்ற கோபியோடு ராதிகாவும் இருக்கும் எபிசோட் காட்கள் ஒளிப்பரப்பாகி அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் சில எபிசோட்டிற்கு பின் விலகியுள்ளதாக கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக இந்த கதாபாத்திரம் கோபி தான்.
தற்போது தனிப்பட்ட காரணத்திற்காக இனிமேல் கோபியாக என்னால் நடிக்க முடியாது என்று கண்ணீர் விட்டபடி எமோஷ்னலாக பேசியிருக்கிறார் சதீஷ்.
இணையத்தில் அவர் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வேண்டாம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.