என் சாவுக்கு நானே மாலையோட ரெடி ஆகிட்டேன்!! பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட புகைப்படம்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை பற்றி மையமாக எடுத்து ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் தற்போது இரண்டாம் மனைவி ராதிகாவால் தினமும் கோபி குடித்துக்கொண்டு வருகிறார்.
தலைக்கேரிய மதுவால் ரோட்டில் விழுந்து கிடக்கும் அப்பாவை பார்த்த செழியன் பாக்யா வீட்டிற்கு கூட்டிச்செல்கிறார். ஏற்கனவே கோபியை கோவிலில் சந்துத்து பேசிய அம்மா, வீட்டிற்கு வந்துடு என்று கூறியது ராதிகாவை கோபப்படுத்தியது.
இந்த நிலையில் கோபியை பாக்யா வீட்டிற்கு சென்றது மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். இந்நிலையில், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ், இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருவார்.
தற்போது கையில் மாலையுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், கோபி என்ன மேன், மாலையோட நிக்கற, அப்போ இரண்டாவது விவாகர்த்துக்கா? மூன்றாம் திருமணத்துக்கா? இல்லீங்க, என்னோட சாவுக்கு நானே மாலையோட ரெடி ஆகிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் காமெடியாகவும், அப்படியிருந்தால் காமெடிக்காக இதை சொல்லாதீங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.