காசு கொடுக்குறாங்க அப்படித்தான் நடிக்க முடியும்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி

baakiyalakshmi serilas televition
By Edward Apr 14, 2021 08:51 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் போதுமான ரசிகர்களை கவர்ந்து பார்க்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் தற்போது எட்டாத உயரத்தை தொட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கதை விறுவிறுப்பாக சென்றுள்ளது அனைவருக்கும் தெரிந்தது. இல்லத்தரசிகளின் பொறுப்புகளை எடுத்துக்காட்டி ஒளிப்பாரப்பாகி வரும் இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் சதிஷ் குமார் நடித்து வருகிறார்.

முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து மனைவி பாக்கியலட்சுமியை எப்போது திட்டிவரும் காட்சிகள் அமைந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் பலர் அவரை இணையத்தில் திட்டி தீர்த்தும் வருகிறார்கள்.

இதை பார்த்து சதீஷ் குமார் பாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலாளி சம்பளம் கொடுக்கிறாரு, நடிக்கனும். வில்லனாக நடித்தால் தான் ரசிக்க முடியும். கதைக்காக தான் அப்படி நடிக்கிறேன். திட்டுவதை விருதாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.