TRP-க்காக ஏதேதோ போடுறாங்க யூடியூப்காரங்க!! பேட்டியில் சந்திரமுகியாக மாறிய பாக்கியலட்சுமி சுஜித்ரா..
ஸ்டார் விஜய் டிவியில் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் முக்கிய சீரியலாக பலரின் ஆதரவை பெற்று வருவது பாக்கியலட்சுமி சீரியல்.
இந்த சீரியலில் பாக்யாவாக நடிகை சுஜித்ராவும் வில்லி ராதிகாவாக நடிகை ரேஷ்மாவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இருவரும் அளித்த பேட்டியொன்றில், எது சொன்னாலும் எழுதுராங்க, 26 வருஷத்தில் இதுவரை நான் எந்த சேனலுக்கு பேட்டிக்கொடுக்குறது இல்லை.
இப்போ ரேஷ்மாவுக்காக தான் இங்க வந்தேன் என்று நடிகை சுஜித்ரா கூறியிருக்கிறார். மேலும், உங்க டி ஆர் பிக்காக யூடியூப் சேனலில் ஏதேதோ போடுறீங்க.
எல்லாம் கண்ணால பாத்தீங்களா. இதற்காக தான் நான் பேட்டிக்கொடுக்கிறது இல்லை.
தெரியாமலே நம்மள பத்தி பேசுறாங்க எழுதுறாங்க, அதை நிருபிங்க என்று கூறி சந்திரமுகியாக மாறி பேசியிருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கைக்காக தான் சினிமா பிரபலங்கள் இதற்காக தான் பேட்டிக்கொடுப்பதில்லை என்று ரேஷ்மா கூறியுள்ளார்.