திருமணமாகி 4 மாதத்தில் சீரியலுக்கு குட்பை சொன்ன ஆர்யன்! என்ன காரணம்?

serial baakiyalakshmi aryan modelactress chizhiyan
By Edward Mar 02, 2022 04:25 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. சமீபத்தில் பாக்யாவை விவாகரத்து செய்ய கோபி போடும் பிளான் மற்றும் பாக்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று குழப்ப வைத்தது என சீரியலின் சுவாரஷ்யம் நீண்டு கொண்டே போகிறது.

இந்நிலையில் பாக்யாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாடல் நடிகர் ஆர்யன். இவருக்கும் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவிற்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணமாகியது.

இந்நிலையில், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து ஆர்யன் விலகியுள்ளாராம். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவருக்கு பதிலாக ராஜபார்வை சீரியலில் நடித்த நடிகர் விகாஷ் சம்பந்த் நடிக்கவுள்ளாராம்.

Gallery