கள்ள காதலியுடன் நெருக்கமாக இருந்த கோபி.. கையும் கழவுமாக மாட்டிக்கொண்ட ப்ரோமோ வீடியோ

vijay tv serial radhika baakiyalakshmi gopi
By Kathick Oct 24, 2021 05:50 AM GMT
Kathick

Kathick

Report

சின்னத்திரையில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பல நாட்களாக கோபி ராதிகாவுடன் இருக்கும் நட்பை தன் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வருகிறார். தற்போது ராதிகாவுடன் கோபிக்கு இருக்கும் உறவு கோபியின் தந்தைக்கு தெரிவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

கோபியின் தந்தை கோவிலுக்கு வருகிறார். அங்கு கோபி யாரோ ஒரு பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார். அந்த பெண் பாக்யாவின் பிரெண்ட் ராதிகா என்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் கோபியின் தந்தை. அப்பொழுது ராதிகாவின் மகள் ஸ்ருதியை கோபி பாசமாக அணைத்து முத்தமிடுவதையும் பார்க்கிறார்.

வீட்டில் நல்லவன் மோல் வேஷம் போடும் கோபியின் இந்த செயலை பார்த்து அவரது தந்தை நம்ப முடியாமல் நிற்கிறார். பின்னர் ஒரு முடிவுடன் அவர்களை நோக்கி செல்வது போல காட்சி முடிவடைகிறது. பல நாளாக தனக்கு மற்றொரு குடும்பம் இருப்பதை மறைத்து வந்த கோபி தற்போது தன் தந்தையிடம் மாட்டிக்கொள்கிறார். ஏற்கனவே கோபியை பற்றி அவரது வீட்டில் வேலை செய்யும் செல்வி பாக்கியாவிடம் கூறியுள்ளார். ஆனால் ,அதை நம்பாத பாக்கியா தற்போது என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.