தலைக்கேறிய போதையால் தல்லாடிய கோபி! கள்ளத்தொடர்பு தெரிந்து கதறி அழும் பாக்யலட்சுமி..

Serials Baakiyalakshmi
By Edward Jun 02, 2022 02:20 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் இரு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்யலட்சுமி. குடும்ப இல்லத்தரசிகளின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பாக்யா, கோபி, ராதிகா என்ற மூன்று ரோல்கள் தான் சீரியலை தூக்கி நிறுத்தி வருகிறது. கோபி கள்ளக்காதலியாக இருக்கும் ராதிகாவை எப்படியாது திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் குடும்பத்தையும் விட்டுவர தயாராகி பல பிளான்களை போட்டு வருகிறார்.

ஆனால் நேற்றைய எபிசோட்டில் கோபி ராதிகாவிடம் தன் மனைவி யார் என்பதை போதையில் உளறியுள்ளார். இதனால் கோபியை வீட்டினைவிட்டு வெளியே போக சொல்ல வீட்டுக்கு வந்துள்ளார் கோபி. போதை தலைக்கேறி தல்லாடி வரும் கோபியை பார்த்து ஷாக்காகி தூங்க வைத்துள்ளார் பாக்யா.

தூங்கத்தில் இருக்கும் கோபி ராதிகா, மயு நீங்கள் தான் எனக்கு முக்கியம் என்று கண்டபடி உளறுவதை பாக்யா கேட்டு விடுகிறார். தன் கணவரை பற்றிய பலர் இப்படி கூறியும் நம்பாத பாக்யாவிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து சீரியலின் பாதையில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கவுள்ளது.