நீ வெறும் வேலைக்காரிக்கு சமம்தான்.. பாக்யலட்சுமி சீரியலைவிட்டே போக முடிவெடுத்த சதிஷ்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பற்றி மையமாக எடுத்து வரும் இந்த சீரியலில் பாக்யா என்ற ரோல் மிகவும் ரசிக்க வைத்து வருகிறது.
சமீபத்திய எபிசோட்டில் கோபியின் கள்ளக்காதலை அறிந்த பாக்யா மற்றும் குடும்பத்தினர் கோபத்தில் இருக்க விவாகரத்து செய்யலாம் என்று ஒரு முடிவெடுக்கிறார் பாக்யா. விவாகரத்து பெற்று வீடு திரும்பிய பாக்யாவை குடும்பத்தினர் ஒருவரும் விடாமல் திட்ட இதை பயன்படுத்திக்கொண்ட கோபி பாக்யாவை நிறந்தரமாக வீட்டைவிட்டு துறத்த கண்டபடி பேசியுள்ளார்.

இதனால் பெட்டியை கட்டி கிளம்ப துடித்த பாக்யாவை சமாதானப்படுத்த குடும்பத்தினர் போராடியும் முடியாமல் போகிறது. இந்த காட்சியால் வெறுப்பாகிய ரசிகர்கள் கோபியை கண்டபடி திட்டி சமுகவலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இதனை கண்ட கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ பதிவினை பகிர்ந்துள்ளார்.
ரியலில் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள், அடுத்த 5 நாள் ரொம்ப மோசமாக இருக்க போகிறது. தெரிந்தோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்துமன்னித்து கொள்ளுங்கள். சிலர் ஆறுதலாகவும் சிலர் கோபத்தில் திட்டியும் மெண்டல் மாதிரி என்றும் சொல்கிறார்கள்.
அது எனக்கே கஷ்டமாக இருக்கிறது. சீரியலை விட்டு போய்விடலாம் என்ற எண்ணமும் தோன்றி பாசிட்டிங், சாஃப்ட் கதாபாத்திரம் நடிக்கலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால், எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா அதனால் அதை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
என்னதான் இது சீரியலாக இருந்தாலும் இது வெறும் நடிப்பு தான் என்று கூறி பதிவிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.
மன்னிச்சிடுங்க.. இது வெறும் நடிப்பு தான்! #Gopi #Baakiyalakshmi pic.twitter.com/YQxlqpRR8J
— Parthiban A (@ParthibanAPN) August 12, 2022