தந்தையின் சுயரூபத்தை கண்ணால் பார்த்த எழில்! பாக்யலட்சுமி சீரியலில் அடுத்தது இதுதான்..
தொலைக்காட்சி சீரியலில் தற்போது இல்லத்தரசிகளை மிகவும் கவர்ந்து வரும் சீரியல் பாக்யலட்சுமி. இல்லத்தரசி எப்படி குடும்பத்தை நடத்துகிறார் என்னன்ன அவலங்களை சந்திக்கிறார் என்பதை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வருகிறது. மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர் கோபி மறைமுகமாக காதலி ராதிகாவை பார்க்க செல்வது வெளியில் போவது என்று இருப்பதை ராதிகா மகள் திட்டி விடுகிறார்.
இனி வரும் ராதிகா கதாபாத்திரம் நெகடிவ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ராதிகாவாக நடித்த நடிகை ஜெனிப்பர் விலகி தற்போது பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வருகிறார். இன்றைய எபிசோட்டின் பிரமோ வெளியாக கதையில் சில மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ராதிகாவுடன் ஓட்டலில் மிகவும் நெருக்கமாக இருப்பதை எழில் பார்த்து விடுவதை கோபி பார்த்துவிட,
உடனே மனைவி பாக்யலட்சுமிக்கு புதிய இருசக்கர வாகனம் கொடுத்து கதையை மாற்றியுள்ளார். கோபி அப்படி இன்னொரு பெண்ணிடம் இருந்ததை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லுவாரா இல்லையா என்று இனிதான் காணவேண்டும்..