போன முதல் நாளே தாத்தாவால் படாதபாடு படும் ராதிகா.. அடுத்த ரவுண்டுக்கு தயாரான கோபி

Star Vijay Serials Baakiyalakshmi Reshma Pasupuleti
By Edward Nov 20, 2022 03:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக இல்லத்தரசிகளின் கஷ்டங்களை மையப்படுத்தி ஒளிப்பரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சமீபத்தில் பாக்யாவை விவாகரத்து செய்த சில நாட்களில் குடும்பத்தை விட்டுவிடு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ராதிகாவின் கழுத்தில் தாலிக்கட்டியது முதல் இன்று வரை அவரை படாத வலிகளை சமாளித்து வருகிறார் கோபி. இரண்டாம் மனைவியின் மகள் மயூவையும் பார்த்துக்கொண்டு, பாக்யாவின் மகள் இனியாவையும் பார்த்து வருகிறார்.

இடையில் தாத்தா செய்யும் குறும்புத்தனத்தால் கோபி, ராதிகாவுக்கு இடையில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் இனியா அப்பா தான் முக்கியம் என்று கோபியுடன் ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். இதனால் பாக்யா உள்ளிட்ட மற்றவர்கள் அதிர்ச்சியடைய, தாத்தாவை போய் இனியாவை கூப்பிட்டு வர கூறுகிறார்கள்.

ஆனால் தாத்தா என் பேத்தி இருக்கும் வீட்டுக்கு போறேன் என்று சூட்கேஷை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். போன ஒரே நாளில் சாப்பிட போகும் இடத்தில் தாத்தா இது காரக்குழம்பா, சாப்பாடு பாணையில் வடிக்கணும் என்று அட்வை செய்து ராதிகாவை கோபமடைய செய்கிறார்.

கோபி தன் பங்கிற்கு எல்லாம் நல்லா இருக்கே என்று ராதிகாவுக்கு சப்போட்டாக பேசியிருக்கிறார். போன ஒரே நாளில் குறையில் ஆரம்பித்து டார்ச்சர் செய்ய ஆர்மபித்துவிட்டார்.