புகையிற நெருப்பில் எண்ணை ஊத்திய கோபி அம்மா!! பாக்யாவுக்கு வில்லியாக மாறிய ராதிகா
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இல்லத்தரசிகளின் கஷ்டத்தை பற்றி விவரித்து வரும் இந்த சீரியலில் பாக்யா, கோபி என்ற இரு கதாபாத்திரம் முக்கியமானதாக அமைந்துள்ளது.
பாக்யாவுக்கு துரோகம் செய்து ராதிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த கோபியின் சுயரூபம் தெரிந்த பாக்யா, கோபிக்கு விவாகரத்தும் கொடுத்து விடுகிறார். எழியனை தவிர மொத்த குடும்பவே பாக்யா மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கோபி இப்படி செய்ததால் ராதிகாவின் வீட்டிற்கே சென்று பாக்யா அவரை திட்டியிருந்தார்.
அவரை தொடர்ந்து ஜெனி, கோபியின் அப்பா ராதிகாவை திட்டித்தீர்த்தார். அதைதொடர்ந்து கோபியின் அம்மாவும் தன் பங்கிற்கு ராதிகா வீட்டிற்கு சென்று சாபம் விட்டுள்ளார். நீ நல்லாவே இருக்க மாட்ட என்று கூறியதும் போதும் நிறுத்துங்கள் என்று ராதிகா கத்தியுள்ளார்.
இதனால் ராதிகா வில்லியாக மாறி கோபி குடும்பத்தை பழிவாங்க கோபியுடன் வாழ முடிவெடுத்து விடுவார் என்று கதையை எடுத்து செல்லவுள்ளார் இயக்குனர். எரியிற நெருப்பில் எண்னை ஊற்றுவது போல கோபி குடும்பத்தினர் ராதிகாவை திட்டி வில்லியாக்கி விட்டீர்களே என்று நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கோவத்த கொஞ்சம் உங்க பையன் கோபி மேல காமிங்க.. ?
— Vijay Television (@vijaytelevision) August 23, 2022
பாக்கியலட்சுமி - திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/9L1kAaEw96