கோடியை அள்ள ஆசைப்பட்ட சூப்பர்ஸ்டார்!! பாபா ரீரிலீஸ் கொடுத்த வசூல் இவ்வளவு தான்..

Rajinikanth Gossip Today
By Edward Dec 17, 2022 05:33 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா படம் சமீபத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அதற்காக நவீன நயத்துடன் உருவாகி வெளியாகி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். ஆனால் எதிர்ப்பார்த்த அளவில் படம் பெரியளவில் வசூல் பெறவில்லை. முதல் நாள் மட்டும் 57.5 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது.

அதேபோல் படத்தினை பார்க்க கூட்டம் போகப்போக குறைய ஆரம்பித்தது. மூன்றாவது நாளில் 23.75 லட்சம் பெற்றது. இந்நிலையில் பாபா படம் வெளியாகிய ஒரு வாரத்தில் 1.26 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

பிறந்த நாளுக்கு எப்படியாவது ஒரு 10 கோடியாவது தேத்திவிடலாம் என்று ஆசைப்பட்ட ரஜினிக்கு இது பெரிய இடியாக இருந்தது.

இதனால் தான் பிறந்தநாளுக்கு ரசிகர்களை பார்க்கவரவில்லையா என்றும் வீட்டில் இருந்து கொண்டு பேரன்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிடமட்டும் தெரிந்த அவருக்கு ரசிகர்களை பார்க்க நேரமில்லையா என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.