அழுக்கான உள்ளாடையை எடுத்து அப்படி செய்ய விரும்பவில்லை... ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு பிரித்விராஜ் பேச்சு

Actors Babloo Prithiveeraj Tamil Actors
By Dhiviyarajan Dec 07, 2023 01:22 PM GMT
Report

சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட 27 வயது குறைந்த ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இதனால் பிரித்விராஜ் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அந்த ஜோடி பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அழுக்கான உள்ளாடையை எடுத்து அப்படி செய்ய விரும்பவில்லை... ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு பிரித்விராஜ் பேச்சு | Babloo Prithiveeraj Talk About Break Up

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பப்லு பிரித்திவிராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள்.

என் வாழ்க்கையில் பல ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன். இனி மேலும் திருந்தவில்லை என்றால் நான் முட்டாள் என்று அர்த்தம். இப்போது தான் எல்லாரும் எனக்கு புரிகிறது. கடவுள் என் வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார்.

மேலும் பேசிய அவர், என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க நான் விரும்பவில்லை. நான் அழுக்கு ஜட்டி என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை குறித்து தான். நான் சில விஷயங்களை பொதுவெளியில் பேச விரும்பவில்லை என்று பப்லு பிரித்திவிராஜ் கூறியுள்ளார்.  

You May Like This Video