முதல் மனைவியை பிரிய இதுதான் காரணம்!! 2ஆம் கல்யாணத்துக்கு பின் பப்லு ஓப்பன்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் மற்றும் வெள்ளித்திரை படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். நான் சிகப்பு மனிதன் படத்தில் ஆரம்பித்த ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.
அதன்பின் சின்னத்திரையில் மர்ம தேசம் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை ராதிகா தயாரிப்பில் வெளியான் வாணி ராணி சிரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பீனா என்பவரை 1994ல் திருமணம் செய்து கொண்ட பப்லு, ஹகமது மோகன் ஜாஃபர் என்ற மகனையும் பெற்று வளர்த்து வந்தார்.
25 வயதான மகன் ஹகமது ஆட்டிஸம் குறைபாடு இருப்பதால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்துவிட்டார். தனியாக மகனை வளர்த்து வரும் பப்லு 23 வயதான ஷீடல் என்ற மலேசிய இளம்பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியில் பங்கு பெற்ற பப்லு, முதல் மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை கூறியிருக்கிறார். விவாகரத்து செய்ய ஷீடல் காரணம் கிடையாது. விவாகரத்து செய்யாமல் பிரிந்து 6 வருடம் மகனுடன் தனியாக இருந்தேன்.
என்னால் அவருடன் ஒன்னா இருக்க முடியல, எதுவாக இருந்தாலும் ரெண்டு பேரும் பேசும் போது ஆர்கியூமெண்ட் ஆகி, இதனால் என் பையனும் பாதிப்படைகிறான். அது போகப்போக இருவருக்கும் செட்டாகாமல் போனது.
அதைவிட ஒரே ஒரு ரீசன், எனக்கு மரியாதை இல்லை. கல்யாணத்திற்கு பின் பெஸ்ட் ப்ரெண்ட், மனைவியாகினார். ஆனால் அவர் அதற்கு பின் பிரெண்ட்டாகவே இருந்தார். மேலும், ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர், என்னா ஹான்சம் என்று குறிப்பிட்டு பேசிய போது, என் எக்ஸ் மனைவி, இவன் ஹான்சமா என்று அசிங்கப்படுத்தினார்.
அதெல்லாம் போக, அவங்க வீட்டிற்கு காரில் போகவிடாமல் ஆட்டோவில் போவோம் என்று மரியாதை இல்லாமல் மட்டம் தட்டி நடந்து கொண்டது. சாப்பிட்டியா என்று அவர் கேட்டதே இல்லை. இது தான் விவாகரத்துக்கு காரணமாகிவிட்டது என்று பப்லு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.