நயன்தாரானு பேரு வெச்சா போதுமா? தயாரிப்பாளர் செய்த செயலால் கோபத்தில் நெட்டிசன்கள்

Nayanathara gentleman2 NayanatharaChakravarthy
By Edward Mar 23, 2022 11:21 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நயன் தாரா பல படங்களில் நடித்து தயாரித்தும் வருகிறார். பாலிவுட், தமிழ் என பிசியாக இருக்கும் நயன் 1993ல் இயக்குனர் சங்கர் இயக்கி கே. டி. குஞ்சுமோன் தயாரித்து வெளியான ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என்ற் செய்தி இணையத்தில் கசிந்தது.

பல ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தயாரிக்க முடிவு செய்த குஞ்சுமோன் இசையமைக்க கீரவாணியை இப்படத்தில் தேர்வு செய்துள்ளார். மேலும் இயக்குனர், நடிகர்கள் யார் என்று தெரியவில்லை.

இசையமைப்பாளரை பெயரை அறிவித்த அவர் நயன் தாரா இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறியது அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் உண்மையான லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா ஜெண்டில்மேன் 2வில் நடிக்கவில்லையாம். அவர் பெயரை கொண்ட நயன் தாரா சக்ரவர்த்தி தான் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

ரஜினி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த இளம் நடிகை. நயன் தாராவுடன் குசேலன் படத்தில் கூட இவர் நடித்திருப்பார்ர். அப்போது என் பெயரை திருடியது நீ தானா? என்று கிண்டலடித்தார் என நயன் தாரா சக்ரவர்த்தி பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது படத்தில் இவர் தான் நடிக்கவுள்ளார் என்று குஞ்சுமோன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு விளம்பரத்திற்காக நயன் தாரா முகத்தை பயன்படுத்துவீர்களா என்று லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.