திருமணமாகாமல் அம்மாவாகப் போகும் விஜய் பட நடிகை!! இலியானா வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்காகும் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. இப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.
அதன்பின் நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கிளாமரில் ரசிகர்களை தன் பக்க ஈர்த்தார். இடுப்பழகி என்ற பெயரோடு ரசிகர்களை கவர்ந்த இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
2019ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தோல்வியை சந்தித்தார் இலியானா. இதனால் படவாய்ப்பினை இழந்து வந்த இலியானா கிளாமரில் உச்சத்திற்கே சென்று புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது தான் விரைவில் தாயாகவுள்ளேன் என்ற தகவலை இணையத்தில் புகைப்படத்தோடு பகிர்ந்திருக்கிறார் இலியானா. திருமணம் செய்யாமல் எப்படி தாயாக முடியும் யார் அப்பா என்று பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

