உன் மரியாதையை காப்பாத்திக்க! பிரபல நடிகருக்கு இயக்குனர் பாலா அட்வைஸ்

bala gvprakash rksuresh pathmanaban
By Edward Feb 24, 2022 10:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் பாலா. சமீபகாலமாக படங்களை இயக்காமல் தயாரிப்பில் குதித்துள்ளார். அப்படி மலையாளத்தில் 2018ல் வெளியான படம் ஜோசப். வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை பார்த்து இதை ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்து விசித்திரன் என பெயர் வைத்து பாலா தயாரித்துள்ளார்.

மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரை வைத்தே எடுத்துள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனரிடம் பட்ஜெட் பற்றி கவலை வேண்டாம் என்று கூறியும் இருந்துள்ளார் பாலா.

சமீபத்தில் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது இதுபற்றி பேசியபோது, எப்போது படம் எடுத்துவிட்டு சரியாக வரவில்லை என்றால் என் பெயரையோ கம்பெனி பெயரையோ போடாதீர்கள் என்று கூறிவேன்.

ஆனால் இப்படத்தில் பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டேன். மேலும் ஆர்கே சுரேஷ் உருப்படியாக ஒரு படத்தை முடித்துவிட்டார். கோமாளித்தனம் செய்கிறது போல அடுத்தடுத்த படங்களை பண்ணாமல் கவனமாக இரு என்று கூறியுள்ளார். உன் மரியாதையை இப்படத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் பாலா.