பாலாவால் பிச்சை எடுத்த நடிகை! மனசாட்சியில்லாமல் இப்படியா செய்றது..
சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட மிகப்பெரிய ஹிட் படங்களை கொண்டு தமிழ் சினிமாவில் பணியாற்றி வருபவர் இயக்குனர் பாலா. படத்தில் நம்மை அழவைப்பதைவிட அவர் படத்தில் நடிக்கும் கலைஞர்களை உண்மையாக அழவைப்பார் என்றும் கூறப்படுவதுண்டு.
அப்படி அவர் இயக்கி வெளியான படம் நான் கடவுள். ஆர்யா, பூஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கண் தெரியாத பிச்சை எடுக்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூஜா. இப்படத்தில் பாலா உண்மையாகவே கண் தெரியாத அளவிற்கு லென்ஸ் வைத்து கருவிழியை மறைத்து நடிக்க வைத்துள்ளார்.
அதிலும் தத்ரூபமாக படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் உண்மையாகவே பிச்சை எடுப்பது போன்று எடுத்துள்ளார்.
பொதுமக்களும் பூஜா என்பது தெரியாமல் பிச்சை போட்டுள்ளார்களாம். இதை சில வருடங்களுக்கு முன் நடிகை சங்கீதா பேட்டியில் பாலா கூறியிருந்தார். இப்படத்திற்கு பிறகு பெரியளவில் பேசப்படுவார் என்று நினைத்திருந்தும் அப்படியான முக்கிய வாய்ப்புகள் பூஜாவிற்கு கிடைக்கவில்லை.