திருமணமாகி 2 வருஷத்தில் முதல் மனைவி மரணம்!! மறைந்த பாக்யராஜின் கல்யாண புகைப்படம்...
மறைந்த பாக்யராஜ்
சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்களை இயக்கி வெற்றி பெரும் நடிகர்களில் தமிழ் சினிமாவில் இருந்தவர் பாக்யராஜ். கடந்த ஜூன் 27 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாக்யராஜின் மரணத்திற்கு பின் அவரது புகைப்படத்திற்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பாக்யராஜ் பற்றிய பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
முதல் மனைவி
அந்தவகையில் பாக்யராஜின் முதல் மனைவி குறித்து சில விஷயங்கள் வெளியாகியுள்ளது. பாக்யராஜ் தன் படத்தில் நடித்த நடிகையான பிரவீனாவை 1981ல் காதலித்து திருமணம்செய்து கொண்டார்.
2 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரவீனா 1983ல் மஞ்சள் காமாலையால் இறந்துள்ளார். இதையடுத்து, அடுத்த ஆண்டே நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி பிரவினாவை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
