பாலு மகேந்திரா மனைவியின் வயித்தெரிச்சல் சும்மா விடுமா? கணவர் முகத்தை கூட பார்க்க விடாத பாலா
தமிழ் சினிமாவில் 80களில் லிஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர் தான் அவர். மூன்று திருமணங்களை செய்து கொண்டார் பாலு மகேந்திரா.
பாலு மகேந்திராவின் திருமணங்கள் :-
1963ல் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்த பாலு மகேந்திரா ஷோபாவிடம் ரகசியமாக உறவில் இருந்தார். இதன்பின் அகிலேஷ்வரி பாலு மகேந்திராவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பின் 1978ல் ஷோபாவை திருமணம் செய்தார். திருமணமான இரண்டு வருடத்தில் ஷோபா தற்கொலை செய்து மறைந்தார். 18 ஆண்டுகள் தனியாக இருந்த பாலு மகேந்திரா 1998ல் மவுனிக்காவை திருமணம் செய்து கொண்டார். 2014ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
பாலு மகேந்திரா பாலா உறவு :-
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக உருவாகிய பாலா பாலு மகேந்திரனின் சிஷ்யப் பிள்ளையாவார். ஆரம்பத்தில் புரடெக்ஷனில் உதவியாளராக பணியாற்றி அதன்பின் உதவி இயக்குனராக செயல்பட்டார். பாலு மகேந்திரா மீது மரியாதை கொண்ட பாலா நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்களால் பிரம்மிக்க வைத்தார்.
மனைவியை விரட்டிய பாலா :-
தன் கணவர் இறந்த நிலையில் அவர் முகத்தை பார்க்க விடாமல் பாலா துரத்தியடிக்கப்பட்டார் என்று மவுனிக்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மவுனிக்கா சில வருடங்களுக்கு முன் பேட்டியில் கூட கூறியிருந்தார். அதிலிருந்து பாலா மீது மவுனிக்கா கடும் கோபத்தில் இருந்து வந்தார். அவரின் சாபமும் வயித்தெரிச்சலும் தான் பாலா - முத்துமலர் விவாகரத்துக்கு காரணமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.