ஜமீன் பற்றி கூறி சிக்கல்! 10 வருடங்களுக்கு பிறகு கடைசியில் நிம்மதியாகும் இயக்குநர் பாலா

bala vishal arya tamilcinema avanivan
By Edward Aug 20, 2021 07:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்து பல வெற்றி விருது படங்களை கொடுத்து வருபவர் பாலா. கடந்த 2011ல் நடிகர் விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான படம் அவன் இவன்.

நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக வெற்றியை கண்ட இப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும் சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதால் சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்த சங்கராத்மஜன் வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கு கடந்த 10 வருடங்களாக நிலுவையில் இருப்பதால் தற்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகினார். இரு தரப்பினரது புகாரினை முறையாக கேட்டறிந்த நடுவர் இயக்குநர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளனர்.