நான் குடியாரியா? ரூ.40 ஆயிரத்துக்கு சரக்கு குடிச்சேனா!! நடிகை கஸ்தூரி ஆவேசம்..
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்து, பிரபு, கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், கமல் என பல நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கஸ்தூரி சங்கர். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் கஸ்தூரி, சமீபத்திய பேட்டியொன்றில் சினிமா பிரபலங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், பொதுவாக நடிகையாக இருந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை இங்கு இருக்கிறார். அவர்களை பற்றி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காகவும் வியூஸ்காகவும் எது வேண்டுமானாலும் பேசுகிறார்கள். ஒருமுறை நான் ஒரு ஓட்டலில் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது வாங்கி குடித்தேன்னு முக்தர் விவாத்ததில் பேசினார். திமுக ஆட்சியில் எனக்கு குடிகாரின்னு பட்டம் கட்டப்பார்த்தார்கள். அந்த முக்தர் இப்படி போய் பேசித்தான் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் பேசுவதில் ஒரு விஷயம்கூட உண்மை இருக்காது.
மதுவுக்கு எதிரானவன்
நான் மதுவுக்கு எதிரானவன், நான் மது குடித்ததே இல்லை, எனக்கு அந்த பழக்கம் இல்லை, மது அருந்துவதை எப்போதும் எதிர்க்கிறேன். ஆனால் நான் ரூ. 40 ஆயிரத்துக்கு மது வாங்கி குடித்ததாக கூறினார். நானும் என் தோழியும் லைட் மியூசிக் நிகழ்ச்சியில் ஜாலியான நடனமாடிக் கொண்டிருந்ததை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, பாரில் மது அருந்தியதாக கூறி பதிவிட்டார்.

நான் நடிகை என்பதால் என்னைப்பற்றி பேசுகிறார்கள், ஆனால் என் தோழி என்ன தவறு செய்தார்? அந்த வீடியோவால் அவர் மிகவும் வேதனை அடைந்தார். அவளுக்கு நான் என்ன பதில் சொல்வது. நடவடிக்கை எடுக்கலாம் என்றால் யார் அந்த வீடியோவை பதிவிட்டது என்றே தெரியவில்லை.
சென்னை நகரத்தில் எத்தனை பார்கள், பப்புகள், டாஸ்மாக் கடைகள் இருக்கிறது, அங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும்தான் செல்கிறார்களா? அவர்களை நம்பித்தான் அந்த தொழில்கள் நடக்கிறதா? அப்படியிருக்க, ஏன் சினிமாக்காரர்களை மட்டும் குற்றம் சொல்கிறார்கள்? பாருக்கு போகிறார்களா? அங்கு இருக்கும் மற்றவர்கள் எல்லாம் யார் என்று கஸ்தூரி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.