விவாகரத்துக்கு பின் ஹீரோயின்களிடம் இப்படி நடத்தும் இயக்குனர் பாலா? இது நம்ம லிஸ்ட்ல இல்லையேப்பா..

Suriya Krithi Shetty Bala
By Edward Jul 01, 2022 07:22 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உடலை வறுத்தி படங்களை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் இயக்குனர் பாலா. நந்தா, பிதாமகன் போன்ற படங்களை கொண்டு சூர்யாவை வேறு மாதிரியான ஆளாக மாற்றி காட்டியவர். அப்படி பல படங்களில் நடிகர் நடிகைகளை ஆள் தெரியாத அளவிற்கு மாற்றி நடிக்க வைப்பார்.

அப்படி நான் கடவுள் படத்தில் பூஜாவை கூட கண் தெரியாத பெண்ணாக நடிக்கவைத்து தத்ரூபமாக காட்டியிருப்பார். அதேபோல் பரதேசியிலும் கதாநாயகி நாயகனை வேறு மாதிரி காட்டியிருப்பார். இப்படி காட்டி வந்த பாலா விவாகரத்துக்கு பின் நடிகர் சூர்யாவுடன் 17 வருடங்கள் கழித்து இயக்கி வருகிறார்.

சூர்யா 41 படம் ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் பாலா மற்றும் சூர்யா. பாலாவிடம் கொஞ்சம் கோபமாக சூர்யா இருக்கிறார் என்கிற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அக்கடதேசத்து 18 வயதான நடிகை கிரித்தி செட்டியை நடிக்க வைத்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பிலும் கன்னியாக்குமரியில் கிரித்தி செட்டி நடித்திருந்தார். ஆனால் படத்தில் நடிகையை ஒரு தேவதை போல் காட்டி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எப்போது கொடூரமாக நடிகைகளை காட்டி வரும் பாலா விவாகரத்துக்கு பிறகு இப்படியொரு கதையை எடுத்து வருவதை படக்குழு அதிர்ச்சியோடு பார்த்து வருகிறார்களாம்.