இறுதி சடங்கு செய்யவிடாமல் பாலா செய்த கொடுமை!! தயாரிப்பாளர் விட்ட சாபம் இன்னும் விடவில்லை..

Arya Gossip Today Bala
By Edward Dec 18, 2022 01:51 PM GMT
Report

தமிழில் தனக்கென்று ஒரு பாணியில் படங்களை இயக்கி வெளியிடுவதில் பாலா ஒரு தனி இடத்தில் இருக்கிறார். அப்படி நடிக்கும் கலைஞர்களுக்கு நடிப்பு வரவில்லை என்றால் அடிக்கும் அளவிற்கு சென்றுவிடுவார் பாலா.

இறுதி சடங்கு செய்யவிடாமல் பாலா செய்த கொடுமை!! தயாரிப்பாளர் விட்ட சாபம் இன்னும் விடவில்லை.. | Bala Who Bullied Him By Not Allowing

அழகன் தமிழ்மணி

அப்படி சூர்யாவிடம் எடக்குமுடக்காக நடந்து கொண்டதால் தான் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மனைவி விவாகரத்து, படங்கள் அமையாமல் போனது, சூர்யா கழட்டிவிட்டது என்று பல பிரச்சனைகளுக்கெல்லாம் நான் விட்ட சாபம் தான் என்று ஒரு தயாரிப்பாளர் கூறியுள்ளார். நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் அப்பாவாக அழகன் தமிழ்மணி நடித்திருப்பார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளராக மலையாளத்தில் பல படங்களை தயாரித்திருக்கிறார். அப்படி நான் கடவுள் படத்தில் நடிக்க பாலா கேட்டதும், எனக்கு நடிப்பு வராது என்று கூறியிருக்கிறார். ஆனால், பாலா அழகன் தமிழ்மணி வற்புறுத்தி நடிக்க கேட்டிருக்கிறார்.

வேறுவழியின்றி நடித்தவரை பலமுறையில் கொடுமைப்படுத்தியிருக்கிறார் பாலா. அடிப்பு வரவில்லை என்று அடிக்க கைநோங்கியும் இருக்கிறார். இதையும் தாண்டி மோசமான சம்பவம் ஒன்றினை செய்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளார் பாலா.

இறுதி சடங்கு செய்யவிடாமல் பாலா செய்த கொடுமை!! தயாரிப்பாளர் விட்ட சாபம் இன்னும் விடவில்லை.. | Bala Who Bullied Him By Not Allowing

வயிறு எரிந்து சாபம்

அதாவது அழகன் தமிழ்மணின் பெற்றோர் இறப்பில் கூட இறுதி சடங்கு செய்ய மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பாலா, ஏற்கனவே 3 வருடங்களாக படம் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

இதில் நீங்கள் மொட்டை அடித்தால் இன்னும் 3 வருடம் இழுக்கும் என்று கூறியுள்ளார். அப்படி நடக்க வேண்டும் என்றால் அதை செய்யுங்கள் என கூறியுள்ளார். ஒரு தயாரிப்பாளராக இதுகுறித்து இழப்பு ஏற்படும் என்று நினைத்து மொட்டை அடிக்காமல் இறுதி சடங்கை செய்துள்ளார்.

இதன்பின் பாலா நீ நல்லாவே ஒருக்கமாட்ட, நாசமா போய்விடுவ என்று வயிறு எரிந்து சாபம் விட்டுள்ளார். இதனால் தான் விவாகரத்து படவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார் பாலா என்று கூறியிருக்கிறார் அழகன் தமிழ்மணி.