தயாரிப்பாளரிடம் கேவலமாக நடந்து கொண்ட பாலா.. வாய்ப்பு கொடுத்தவருக்கே துரோகம் செஞ்சிட்டாரே...

Suriya Bala
By Edward Sep 16, 2022 10:17 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாலா. மனைவியை விவாகரத்து செய்தப்பின் நடிகர் சூர்யாவுடன் வணங்கான் படத்தில் கூட்டணி வைத்து ஷூட்டிங்கை பாதி அளவிற்கு எடுத்து முடித்துவிட்டார்.

தயாரிப்பாளரிடம் கேவலமாக நடந்து கொண்ட பாலா.. வாய்ப்பு கொடுத்தவருக்கே துரோகம் செஞ்சிட்டாரே... | Bala Who Cheated The Producer Of Pithamaga Money

நஷ்டத்தை கொடுத்த பிதாமகன்

இந்நிலையில் பிதாமகன் படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் பாலா மீது ஒரு குற்றச்சாட்டினை வைத்துள்ளார். 2003ல் வெளியான பிதாமகன் படத்தில் சூர்யா, விக்ரம், லைலா உள்ளிட்ட பலர் நடித்து வெளியானது.

படத்தின் கதையளவில் நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது. இதனால் அப்படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய பாலா, தயாரிப்பாளர் வி ஏ துறையை கூப்பிட்டு மற்றொரு படத்தினை எடுத்துக்கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தாராம்.

தயாரிப்பாளரிடம் கேவலமாக நடந்து கொண்ட பாலா.. வாய்ப்பு கொடுத்தவருக்கே துரோகம் செஞ்சிட்டாரே... | Bala Who Cheated The Producer Of Pithamaga Money

தயாரிப்பாளரை ஏமாற்றிய பாலா

அதற்காக பாலா 10 லட்சம் அட்வான்ஸ்டாக தயாரிப்பாளரிடம் வாங்கியிருந்தாராம். ஆனால் பல வருடங்களாகியும் பாலா அவரை கண்டுக்கொள்ளாமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் பணத்தை திருப்பி கொடுக்க கேட்டும் பாலா ஏமாற்றி இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் பணரீதியாக கடும் கஷ்டத்தை சந்தித்து வதார். இதனால் பழங்குடி என்ற படத்தில் வில்லனாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பாலாவின் அலுவலகத்திற்கு சென்ற போது உதவியாளர்கள் அவரை உள்ளே விடாமல் துரத்தி இருக்கிறார்கள்.

இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பின் தயாரிப்பாளர் சங்கத்தினர் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தி கூட்டிச்சென்றுள்ளனர்.