அடுத்த வாரிசு ரெடி பண்ணிட்டேன்!! ஹீரோவாக அறிமுகமாகும் பாலையா மகன்..
Actors
Nandamuri Balakrishna
By Jai
தெலுங்கு சினிமாவில் 64 வயதை கடந்தும் தற்போது வரை ஹீரோவாக நடித்து பல கோடி ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா.

தனக்கென ஒரு ஆக்ஷன் காட்சியில் மிரட்டி நடித்து வரும் பாலகிருஷ்ணாவை செல்லமாக பாலையா என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் பட நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்நிலையில், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா தேஜாவும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.

இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகவுள்ள சிம்பா என்ற படத்தில் பாலையா மகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தற்போது படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி டிரெண்ட்டாகி வருகிறது.