ரச்சிதாவுடன் அந்த காட்சியில்.. செமயா வாழ்ந்து இருக்கேன்? பாலாஜி முருகதாஸ் ஓபன்
ஃபயர்
பிக் பாஸ் பிரபலங்களான ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பாலாஜி முருகதாஸ் தற்போது நடித்திருக்கும் திரைப்படம் ஃபயர். இந்த திரைப்படம் வரும் 14 - ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
மேலும், படத்தில் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் ரச்சிதா மற்றும் பாலாஜி நெருக்கமாக நடித்த படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றது. இந்நிலையில், இது குறித்து பாலாஜி முருகதாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ் ஓபன்
அதில், "இந்த பாடல் வெளியான பின் பாலா செமயா வாழ்ந்து இருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்தனர். ஆனால், படத்தில் டைரக்டர் என்ன செய்ய சொன்னாரோ, அதை தான் நான் செய்து இருக்கிறேன்.
அந்த மாதிரியான சீனில் நான் நடிக்கும் போது, என்னை சுற்றி 10 முதல் 15 பேர் இருப்பார்கள், அவர்கள் கூறுவதை தான் நான் அந்த சீனில் செய்ய வேண்டும். இது போன்ற காட்சியில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும்" என்று கூறியுள்ளார்.