குடித்துவிட்டு மகளை அசிங்கமாக திட்டிய பாலாஜி.. கதறும் மனைவி நித்யா

nithya thadi balaji poshika
By Kathick Feb 03, 2022 10:37 AM GMT
Report

சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஒருவர் தாடி பாலாஜி. இவர் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். பாலாஜிக்கும், அவரது மனைவி நித்தியாவிற்கும் ஏற்பட்ட பல பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்று முடியாத நிலையில் வளர்த்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், அடுத்ததாக அதிர்ச்சியளிக்கும் வகையில் நித்யா தனது மகளுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவில் " பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும், பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதை பற்றி பேசவேண்டிய கட்டாயம் இருக்கு. இனிமேலும் என்னைப்பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக, என்னை அவர் அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன்."

" மகள் போஷிகாவை அவர் மிகவும் அசிங்கமாக திட்டி இருக்கும் ஆடியோ என்னிடம் இருக்கிறது. குடிச்சிட்டு அவருடைய டிரைவரை வைத்து என்னை போனில் அசிங்கமாக திட்ட வைத்து, அவர் அருகில் சிரித்து மகிழ்ந்த ஆடியோவும் என்னிடம் இருக்கிறது." என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..